Categories
மாநில செய்திகள்

இனி வாக்காளர் சீட்டுக்கு பதிலாக…. தகவல் சீட்டு வழங்கப்படும் – சத்யபிரதா சாகு தகவல்…!!

வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று தங்களுடைய ஓட்டு பதிவு செய்வதற்காக முன்பு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவல் வாக்குச்சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், நேரம் இவை மட்டும் இடம்பெற்றிருக்கும். இதில் வாக்காளர்களின் புகைப்படம் இருக்காது. வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து தினங்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு இந்த தகவல் சீட்டு அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டுவிடும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |