Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இன்றே ரத்து செய்ய வேண்டும்”- மு.க ஸ்டாலின்

புதுச்சேரியை போன்றே இ – பாஸ் முறையை தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே இந்த ஊரடங்கை அப்புறப்படுத்த அறிவுறுத்தல் கூறியும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரியில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு காரணமாக போடப்பட்டுள்ள போக்குவரத்து தடையை நீக்கம் செய்வது குறித்து சரியான முடிவெடுத்து இன்றிலிருந்து மாநிலங்களுக்கிடையேயான இ – பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் இ பாஸ் முறையை ரத்து செய்து போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாட்டுப் பயணம், கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள், வேலை வாய்ப்புகள் இவை அனைத்தையும் பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |