Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்ப வீட்டுக்கு போயிரலாம்… இளைஞருக்கு நேர்ந்த கதி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் சென்ராயன் இருவரும் கீழே விழுந்ததில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை உடனடியாக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் சென்ராயனை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |