Categories
Tech டெக்னாலஜி

“இனி delete செய்த குறுந்தகவலை திரும்ப பெறலாம்”…. வந்தாச்சு WhatsApp புது அப்டேட்…. இதோ முழு விவரம்….!!!!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீண்டும் திரும்ப பெரும் வசதியானது வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆக்சிடென்ட்டல் டெலிட் என்ற பெயரில் ஸ்டேபிள் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் உள்ள delete for me என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய மெசேஜ் உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்களுக்கு மட்டும் தெரியும். இதேபோன்று delete for everyone என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய மெசேஜ் உங்களுக்கும் நீங்கள் அனுப்பியவருக்கும் தெரியாது. நீங்கள் அனுப்பிய மெசேஜை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்று நினைத்தால் கூட உங்களால் திரும்ப பெற முடியாது.

ஆனால் தற்போது நீங்கள் டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் திரும்ப பெரும் வசதி வாட்ஸ் அப்பில் வந்துள்ளது. அதன்படி delete for me என்ற ஆப்ஷனில் குறுந்த தகவல்களை டெலிட் செய்திருந்தால் வாட்ஸ் அப் திரையின் கீழ் உள்ள undo ஆப்ஷனை பயன்படுத்தி அந்த மெசேஜை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இந்த அழிக்கப்பட்ட மெசேஜை திரும்ப பெறுவதற்கு 5 நொடிகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். மேலும் இந்த புது அம்சத்தை பெறவேண்டும் எனில் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் மெசேஜ் பெற்றவர் என 2 பேருமே வாட்ஸ் அப் புது வெர்ஷனை பயன்படுத்த வேண்டும்

Categories

Tech |