பணிபுரியும் இந்திய குடிமக்கள் பலரும் பணத்தை சேமிக்கும் அடிப்படையிலும், ஆபத்து இல்லாத வருமானத்தை அளிக்க உதவும் வகையிலும் உள்ள பல்வேறு திட்டங்களை தங்களது எதிர்காலத்திற்காக தேடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஓய்வுபெற்ற பின் நிலையான எதிர்காலத்தை விரும்பும் மக்கள் தனியார் மற்றும் அரசு துறைகளில் பல்வேறு வகையான முதலீடுகளை அணுக மக்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கென கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் நேஷ்னல் பென்ஷன்ஸ்கீம் (NPS – National Pension System).
அரசு ஊழியர்களுக்காக மட்டும் முதலாவதாக துவங்கப்பட்ட இத்திட்டத்தை மத்திய அரசு தற்போது தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும், தானாக முன்வந்து அதனைத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீட்டித்துள்ளது. இதனிடையில் NPSல் இணையும் சந்தாதாரர்கள் தங்களுடைய பணிக்காலத்தின்போது முறையான சேமிப்பின் வாயிலாக அவர்களின் எதிர்காலம் தொடர்பாக சரியான முடிவுகளை மேற்கொள்ள உதவும் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. தனி நபர்கள் தங்களது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வழக்கமான வருமானத்தை திரும்பப்பெற மாதம் மாதம் பணம் கட்டலாம். NPSஆனது ஓய்வூதியம் நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் இந்திய அரசாங்கத்தால் கூட்டாக வழங்கப்படுகிறது.
NPS திட்டத்தில் சேருவதற்கான தகுதி
# இந்தியாவின் எந்தஒரு தனிப்பட்ட குடிமகனும் சேரலாம்.
# விண்ணப்பதாரர் தன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியின் படி 18-70 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
# விண்ணப்பதாரர் திட்டத்தால் பரிந்துரை செய்யப்பட்ட KYC விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
NPS கால்குலேட்டரை பயன்படுத்துவது எவ்வாறு..?
# NPSகால்குலேட்டரை பயன்படுத்த வேண்டுமெனில் முதலாவதாக https://www.npstrust.org.in/content/pension-calculator எனும் லிங்கிற்கு செல்ல வேண்டும்.
# அதன்பின் உங்களது பிறந்த தேதியை என்டர் செய்யவும்.
# தற்போது உங்களது மாதாந்திர பங்களிப்பு தொகையை மற்றும் எந்த வயது வரை நீங்கள் பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை என்டர் செய்ய வேண்டும்.
# முதலீடு, வருடாந்திர வருவாய் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை என்டர் செய்ய வேண்டும்.
# இவை அனைத்தையும் முடிந்தபின் உங்களது மாதாந்திர பென்ஷன், வருடாந்திர மதிப்பு மற்றும் மொத்த தொகை போன்றவை பற்றிய தகவலை கம்ப்யூட்டரில் பார்க்கலாம்.
NPS திட்டத்தின் கீழ் ரூ.50,000 பென்ஷன் பெறுவது எவ்வாறு…?
ஒரு நபர் தனது 25வது வயதில் இத்திட்டத்தில் இணைந்து ஒவ்வொரு மாதமும் ரூபாய்.6500 பங்களிக்கத் துவங்கினால் அவர் ஓய்வு பெறும் வரையிலும் அவருடைய மொத்த NPS பங்களிப்பு ரூபாய் 27.30 லட்சமாக இருக்கும். அத்துடன் வருடத்திற்கு எதிர்பார்க்கப்படும் 10 சதவீத வருமானம் கிடைத்தால், மொத்த முதலீடு ரூபாய் 2.46 கோடியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றிNPS சந்தாதாரர் கார்பஸின்40 சதவீதத்தினை வருடாந்திரமாக மாற்றி விட்டால், அதனுடைய மதிப்பானது ரூபாய் 99.53 லட்சமாக மாறும். வருடாந்திர வீதம் 10 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் மாத ஓய்வூதியம் ரூபாய் 49,768 வரை இருக்கலாம். மேலும் இதன்படியுள்ள NPS-சந்தாதாரர் சுமார் ரூபாய் 1.50கோடியை மொத்தமாக பெற்றுகொள்வர்.
NPS-ன் பலன்கள்
# மிககுறைந்த விலைஓய்வூதியம் திட்டமாகதான் NPS உள்ளது. இவற்றில் நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் நிதிமேலாண்மைக் கட்டணங்களும் மிக குறைவு ஆகும்.
# நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாகவும் நடத்தப்படும் POP-களில் ஏதேனும் ஒன்றில் அக்கவுண்ட்டை ஓபன்செய்து நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணை (PRAN) பெறவும்.
# விண்ணப்பதாரர் தன் சொந்த முதலீட்டு விருப்பம் மற்றும் ஓய்வூதிய நிதியை தேர்வு செய்யலாம் (அல்லது) சிறந்த வருமானத்தை பெற ஆட்டோ தேர்வையும் பரிசீலிக்கலாம்.
# பின் விண்ணப்பதாரர் நாட்டில் எங்கு இருந்தும் ஒரு அக்கவுண்ட்டை ஆப்ரேட் செய்யலாம்.
# விண்ணப்பதாரர் பதிவு செய்த POP-SP கிளையைப் பொருட்படுத்தாது நகரம், வேலை ஆகியவற்றை மாற்றினாலும் எந்த POP-SP-க்கள் வாயிலாகவும் தங்களது பங்களிப்புகளை தொடர்ந்து செலுத்தலாம்.