தேசிய ஓய்வூதிய முறை(NPS) என்பது முதலீட்டு வரம்பில்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 70,000 ஓய்வூதியமானது கிடைக்கும். மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும். இதில் 18 -70 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம்.
மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்து கொள்ளலாம். NPS கணக்கீட்டின் அடிப்படையில் 28 -60 வயது வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மொத்தத் தொகை 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
தற்போது 10 சதவீத வருமானத்துடன், மொத்த கார்பஸ் 2.80 கோடி, மொத்த தொகை 1.6 கோடி ஆகும். அதேபோல் வருடத்திற்கு 8 சதவீத வருடாந்திர வீதத்தை வைத்துக் கொண்டால், 60 வருடங்களுக்கு பின் மொத்தத் தொகை (ஓய்வூதியம்) மாதம் 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.