உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தங்களது ஒப்பந்தங்களை மேலும் 5 வருடம் நீட்டித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இந்த இரு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நியூ ஸ்டார் எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்காக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஒப்புக் கொண்ட ரஷ்ய அதிபர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனடிப்படையில் வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 வரை இந்த ஒப்பந்தம் நீடிக்கும். உலகிலேயே மிகப்பெரிய அணு சக்தி நாடுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் நாட்டின் சிறப்பு பொறுப்புகளை கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.