உலக நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது இன்னும் 10 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்வீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் என்னும் அமைதி ஆய்வு நிறுவனமானது பல நாடுகளில் இருக்கும் அணு ஆயுத எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை உலக அரங்கை அதிர செய்திருக்கிறது. 35 வருடங்களாக அணு ஆயுத உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது.
ஆனால், தற்போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் அணு ஆயுதங்கள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். உலகில் தற்போது, அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மொத்தமாக 12,705 அணு ஆயுதங்கள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது