Categories
டென்னிஸ் விளையாட்டு

நம்பர் 1 வீரர் ஜோகோவிச் விசா ரத்து ….! ஆஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை ….!!!

மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஜோகோவிச்தவறிவிட்டதால், அவருடைய விசா ரத்து செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற      17-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகளும் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் செர்பியாவை சேர்ந்த நம்பர் 1 வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பல முன்னணி வீரர்கள் விலகிய நிலையில், ஜோகோவிச்சும் போட்டியிலிருந்து விலகினால் தொடர்  களைஇழந்து  விடும் என்பதால் அவரை விளையாட வைக்க அவருக்கு மட்டும் மருத்துவ விதி விலக்கு அளிக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்துகொள்ள நேற்று இரவு விமானம் மூலம் ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் அவருடைய விசா ரத்து செய்யப்பட்டது.  மேலும் மருத்துவ பரிசோதனைகளுக்காக உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அவருடைய விசா ரத்து செய்யபட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். இது குறித்து ஆஸ்திரேலிய அரசு கூறும்போது,” கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய  மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க ஜோகோவிச் தவற விட்டதாலேயே அவருடைய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று  கூறினர்.

Categories

Tech |