Categories
மாநில செய்திகள்

நம்பர் 311 என்னாச்சு!…..‌ முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீரென போட்ட பிளான்….!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை குறிக்கோள் என்பது ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதுதான். டிஆர்பி நியமன ஆணையில்‌ ஊதிய விகிதம் 4500-125-7000 என்று தான் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பணி நியமன அழைப்பு கடிதத்தில் உள்ள ஊதியத்தையும் வழங்கவில்லை. அதற்குப் பிறகு 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு சமூன்று லட்சம் இடைநிலை ஆசிரியர்களை மிக கடினமான தகுதி தேர்வு எழுதி அதில் 14000 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். தற்போது தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியமும் வழங்கப்படவில்லை. ஊதிய குழுவில் தவறு இழைக்கப்பட்ட பிற துறையினருக்கு ஒரு நபர் ஊதிய குழுவில் 36 பிரிவினருக்கும், 3 நபர் ஊதியக்குழுவில் 24 மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.

எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற திமுகவின் 311வது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை போன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார். இது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி ஒரு நாள் அடையாள கவனியீர்ப்பு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் பருவ விடுமுறையில் மாணவர்களின் நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் சென்னையில் உள்ள DPI வளாகத்தில் மீண்டும் மிக கடுமையான அஹிம்சை வழியிலான உண்ணாவிரதம் போராட்ட நடத்த முடிவு செய்துள்ளோம். இது குறித்து மாநில செயற்குழு கூட்டத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டத்தை அரங்கேற்றுவோம். அதாவது வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடர் உண்ணாவித போராட்டம் நடத்தலாம் என்று தீர்மானம் செய்துள்ளோம். அதற்குள் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை செவிசாய்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

Categories

Tech |