தமிழக அரசியல் வரலாற்றில் ஏராளமான கட்சிகள் தேர்தலை சந்தித்து சென்றிருக்கிறார்கள். இன்றும் தமிழகத்தில் நமக்கு விரல் விட்டு எண்ண தெரிந்த அளவிற்கு மட்டுமே கட்சிகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். குறிப்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் என குறிப்பிட்ட பெயர் தெரிந்த கட்சிகளைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இதை தவிர்த்து ஏராளமான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி பணியாற்றுகிறார்கள். இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில்,
திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிக்கு மாற்று கிடையாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கிறது. ஆனால் நமக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்கள் சுயமாக தங்களது அரசியல் சிந்தனையை வெளிப்படுத்தி சுயட்ச்சை வேட்பாளர்களை கூட முதல்வராக மாற்றியிருக்கிறார்கள். அப்படியான வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி செய்த முதல்வர்களின் எண்ணிக்கையை தரவரிசை பட்டியலில் அடிப்படையில் காணலாம். இதன்படி
முதல் முதல் இடத்தை காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெகு ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி புரிந்து வந்திருக்கிறது. இதன்படி காங்கிரசில் மொத்தம் 6 முதல்வர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் 5 முதல்வர்கள் தமிழகத்தில் முதல்வராக ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து 3 வது இடத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிடித்துள்ளது. இக்கட்சியில் ஐந்து முதல்வர்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இதற்கு பிற்பாடு தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியில் ஒன்றாக கருதப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 3 முதல்வர்கள் மட்டுமே ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இதே வரிசையில் சுயேட்ச்சை வேட்பாளர்களில் 2 முதல்வர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.