நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் கடலூரிலிருந்து 180 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ., தொலைவிலும், செல்லையிலிருந்து 250 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயல் 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது அதிகாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் 155 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு சென்னையில் அவரச உதவி எண் வெளியிட்டுள்ளது. ஏதேனும் அவசர தேவை இருப்பின் 9498181239 என்ற அவசர உதவி எண்னை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். காவல் ஆணையரகத்தில் தற்காலிக கட்டுப்பட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.