சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 108ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக 50 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அண்ணா நகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.