தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 223
2. கோயம்புத்தூர் – 127
3. திருப்பூர் – 108
4. திண்டுக்கல் – 72
5. ஈரோடு – 69
6. திருநெல்வேலி – 56
7. செங்கல்பட்டு – 48
8. நாமக்கல் – 50
9. திருச்சி – 47
10. தஞ்சாவூர் – 38
11. திருவள்ளூர் – 45
12. மதுரை – 42
13. நாகப்பட்டினம் – 42
14. தேனி – 42
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 27
17. ராணிப்பேட்டை – 34
18. தென்காசி – 11
19. திருவாரூர் – 18
20. தூத்துக்குடி – 26
21. கடலூர் – 26
22. சேலம் – 24
23. வேலூர் – 16
24. விருதுநகர் – 19
25. திருப்பத்தூர் – 17
26. கன்னியாகுமரி – 10
27. சிவகங்கை – 11
28. திருவண்ணாமலை – 10
29. ராமநாதபுரம் – 11
30. காஞ்சிபுரம் – 9
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 3
33. பெரம்பலூர் – 3
34. அரியலூர் – 6
மொத்தம் – 1,341.