Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. அதில் 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இங்கு காண்போம்.,

மகாராஷ்டிரா – மகாராஷ்டிராவில் புதிதாக 288 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,204ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகா – கர்நாடகாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 353ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 82 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆந்திரா – ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 572ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் குணமடைந்துள்ளனர்.

குஜராத் – குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று 163 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 92 பேருக்கு கொரோனா புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து குஜராத்தில் மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 929ல் இருந்து 1,021 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நிர்மன் பவனில் நடைபெறும் இந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், பாதுகாப்புப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோன்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |