தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 210
2. கோயம்புத்தூர் – 120
3. திருப்பூர் – 91
4. திண்டுக்கல் – 66
5. ஈரோடு – 69
6. திருநெல்வேலி – 53
7. செங்கல்பட்டு – 43
8. நாமக்கல் – 49
9. திருச்சி – 45
10. தஞ்சாவூர் – 33
11. திருவள்ளூர் – 30
12. மதுரை – 40
13. நாகப்பட்டினம் – 31
14. தேனி – 36
15. கரூர் – 41
16. விழுப்புரம் – 23
17. ராணிப்பேட்டை – 33
18. தென்காசி – 5
19. திருவாரூர் – 15
20. தூத்துக்குடி – 25
21. கடலூர் – 18
22. சேலம் – 20
23. வேலூர் – 14
24. விருதுநகர் – 16
25. திருப்பத்தூர் – 17
26. கன்னியாகுமரி – 10
27. சிவகங்கை – 10
28. திருவண்ணாமலை – 10
29. ராமநாதபுரம் – 10
30. காஞ்சிபுரம் – 9
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 3
33. பெரம்பலூர் – 1
34. அரியலூர் – 4
மொத்தம் – 1,210.