Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் அதிகப்பட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை :

சிவப்பு நிற மாவட்டங்கள் :

1. சென்னை – 210
2. கோயம்புத்தூர் – 126
3. திருப்பூர் – 79
4. ஈரோடு – 64
5. திண்டுக்கல் – 56
6. திருநெல்வேலி – 56
7. செங்கல்பட்டு – 45
8. நாமக்கல் – 45
9. திருச்சி – 43
10. கரூர் – 41
11. மதுரை – 41
12. தேனி – 40
13. ராணிப்பேட்டை – 38
14. திருவள்ளூர் – 33
15. நாகப்பட்டினம் – 31
16. தூத்துக்குடி – 26
17. விழுப்புரம் – 23

ஆரஞ்சு நிற மாவட்டங்கள் :

18. கடலூர் – 20
19. சேலம் – 19
20. திருப்பத்தூர் – 17
21. விருதுநகர் – 17
22. திருவாரூர் – 16
23. வேலூர் – 16
24. கன்னியாகுமரி – 16
25. தஞ்சாவூர் – 16
26. திருவண்ணாமலை – 12

மஞ்சள் நிற மாவட்டங்கள் :

27. சிவகங்கை – 11
28. நீலகிரி – 9
29. காஞ்சிபுரம் – 8
30. தென்காசி – 8
31. ராமநாதபுரம் – 7
32. கள்ளக்குறிச்சி – 3
33. அரியலூர் – 1
33. பெரம்பலூர் – 1

மொத்தம் – 1204

தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |