Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை விகிதம்… தமிழகம் முதலிடம்… !!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் குணமடைந்தவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 77.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரையிலான, 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத வகையில், 81 ஆயிரத்து 533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களில், 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |