மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மாசூம் கூறியதாவது “இந்த ஆண்டில் இதுவரை 559000 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டு மாலத்தீவிற்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். மேலும் இந்த வருடம் இறுதிக்குள் 1.30 கோடி சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இதுவரை நாளொன்றுக்கு 5000 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகின்றனர். அதில் 23 சதவீதம் பேர் தெற்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளில் இருந்து வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கிய காரணமாக கொரோனா பெருந்தொற்றுதான்” என அவர் கூறியிருக்கிறார்.