கணவனின் கனவில் வந்த எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த டெங் பிரவதூதம் என்ற பெண்மணி 20 வருடங்களுக்கு முன் தன் கணவன் கனவில் கண்ட எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கி ரூபாய் 340 கோடி பரிசை வென்றுள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அதே எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த முறை அடித்த அதிர்ஷ்டத்தால் ரூபாய் 340 கோடி வென்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,”கனவில் வந்த எண்ணை வைத்து விடாமல் லாட்டரி சீட்டு வாங்கி வந்தேன். இப்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.