நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியீடு.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஸ்வாதி கொலையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் குத்து படம் பற்றிய கேள்விக்கு இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு பதிலாக வேறு மாதிரியான படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.