கனடாவில், ஒரு பெண் பல வருடங்களாக பல பெயர்களில் பல வேலைகள் செய்து மோசடி செய்து வந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த, Brigitte Cleroux என்ற 49 வயதுடைய பெண் கடந்த 30 வருடங்களாக வேறு வேறு பெயர்களில் பல பணிகளில் சேர்ந்து மோசடி செய்து வந்துள்ளார். அதாவது, செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று வந்த இவர் பாதியில் வெளியேறியிருக்கிறார். அதன்பின்பு, போலியான ஆவணங்களை வைத்து ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
அதன்பின்பு அங்கு இவரின் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் மற்றொரு இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இவ்வாறு பல பெயர்களில், பல இடங்களில் பணியாற்றி மோசடி செய்து வந்திருக்கிறார். இந்த மோசடி வேலையை, கடந்த 1991-ஆம் வருடத்திலிருந்து செய்து வந்திருக்கிறார்.
4 வருடங்களுக்கு முன்பு, ஆல்பர்ட்டாவில் ஒரு தடவை செவிலியராக வேலை செய்த போது, நிர்வாகத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அதன்பின்பு, கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு மறுநாள், 3 மாகாணங்கள் கடந்து, ஒன்ராறியோ நகரின் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கிறார்கள். இவ்வாறு, பல்வேறு இடங்களில் செவிலியராக வேலை செய்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறார்.
தற்போது இவர், Gatineau என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் Ottawa நகர காவல்துறையினர், அவர் மீது, ஒரு பல் மருத்துவமனையில், போலியான ஆவணங்களை கொடுத்து செவிலியராக இருந்ததற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.