தனி மனிதனின் தேவைகளை தெரிந்து தனது திறமையின் மூலம் சேவை செய்பவரும், செய்யும் தொழிலை பெருமையாகவும், அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும், வேலையில் ஒழுக்கத்துடனும், கலை உணர்வுடனும் பணியை செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணியில் வெற்றிக்கான அன்பு இரக்கம் மேன்மை பொறுமை அதோடு புரிந்துகொள்ளும் தன்மை இருப்பவராக இருத்தல் அவசியம் இந்த குணங்கள் நோயாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவை செய்ய பெரிதும் உதவுகின்றது.
விருப்பமும் தியாக மனப்பான்மையும்
இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று ஈடானது எந்த சூழ்நிலையிலும் சேவை செய்ய உழைக்கும்போது ஒரு செவிலியர் தனது சுகம், நேரம் மற்ற பயன்களை இழக்கக்கூடும்.
தன்னடக்கம்
உண்மையான நோக்கமும் ஒழுக்கத்தையும் மட்டுமே கடைபிடிப்பதில்லை. தன்னடக்கம் என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்க கூடியவரே செவிலியர்கள்.
அரவணைப்பு
தூய்மையான அன்பை வெளிப்படுத்தி அரவணைக்கும் தன்மை உள்ளத்தில் நிலைத்திருக்கும் இந்த அன்பானது எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் உலக முழுவதிலும் எங்கு சென்றாலும் நோயாளிகளிடம் காட்ட வேண்டிய அன்பை காட்டுவதாகும்.
துணிவு
குழப்பம் நிறைந்த சூழலில் பிரச்சனைகளை செவிலியர்கள் பொறுமையுடன் கையாள்வது அவசியம். எந்த காரியத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் செவிலியர்கள் இருக்க வேண்டும்.
ஆலோசனை சொல்பவர்
நோயாளிகளிடம் இதனை செய்ய வேண்டும் என வற்புறுத்தாமல் இதனை எவ்வாறு செய்யலாம் என விளக்கி ஆலோசனை கூறி அவர்களையே முடிவெடுக்க செய்தல்.