கொரோனா தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனை நர்ஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் சாமுண்டீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நர்சாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் முடிவில் சாமுண்டீஸ்வரிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாமுண்டீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்த நர்ஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.