இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் நர்ஸ் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயதான ஆண் நர்ஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
St.ஜார்ஜ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் கென் லம்பட்டன். தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு நாட்டில் அஞ்சலி செலுத்துவதற்கு சற்று முன்புதான் கென் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து St.ஜார்ஜ் மருத்துவமனை தலைமை நிர்வாகி ஜாக்குலின் விடுத்த அறிக்கையில் “எங்கள் மருத்துவமனையில் இருதய ஆராய்ச்சி நர்ஸ்களில் ஒருவரான கென் மரணமடைந்தது எங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என கூறியுள்ளார்.