மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வருக்கு நன்றி என அதிமுக தலைவர் ஓ பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார்.
வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அதிமுக கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் உயிர்காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதை அறிவித்ததற்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.