Categories
பல்சுவை

செவிலியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்….!!

செவிலியர்களுக்கான நடத்தை விதிகள்

  • நோயாளிகளிடம் சமூக-பொருளாதார பேதமின்றி நோயின் தன்மையை மனதில் நிறுத்தாமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையோடு சேவை செய்வது அவசியம்.
  • செவிலியரின் அடிப்படைக் கடமை என்பது மக்களின் உயிரைக் காப்பது, நோயாளிகளின் உடல் நலத்தை முன்னேற்றம் அடைய செய்வது, அவர்களின் வேதனையை குறைப்பது.
  • செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியர் பணியை கொடுக்க வேண்டும். அதேபோன்று நன்னடத்தை கொண்டவராகவும் இருத்தல் அவசியம்.
  • செவிலியர்கள் பயிற்சி மட்டுமல்லாது சரியான அறிவும் திறமையும் கொண்டு பணியாற்ற வேண்டும்.
  • செவிலியர்கள் நோயாளிகளின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.
  • மருத்துவரின் பரிந்துரைப்படி செவிலியர்கள் அறிவுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வது அவசியம். அதே சமயம் தீய செயலை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டார் மறுக்க வேண்டும்.
  • செவிலியர்கள் மருத்துவ குழுவினருடன் ஒத்துழைப்பதுடன் மற்ற செவிலியருடன் தோழமையுடன் பழகுவது அவசியம்.
  • செவிலியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக நெறிமுறைகளை கண்ணியமாக வாழ வேண்டும் காரணம் ஒரு செவிலியரின் தனிப்பட்ட வாழ்க்கை மொத்த செவிலியர் துறையையும் பிரதிபலிக்கும்.
  • செவிலியர்கள் என்றும் தம்மால் முடிந்த சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

Categories

Tech |