பிரான்ஸ் நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஐரோப்பிய நாடான பிரான்சும் ஓன்று. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் துவங்கியது. அதாவது, செவிலியர்கள் பலரும் அரசாங்கத்திற்கு எதிராக நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொற்றுநோய் எதிர்கொள்ள எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு #apoilcontrelecovid என்ற ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதுடைய மருத்துவர்களும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பிரான்ஸ் செவிலியர் ஒருவர் கூறுகையில், அரசாங்கம் அனைவருக்கும், எங்கள் நோயாளிகளுக்கும், நமக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இதன் காரணமாகவே இந்த தொற்று நோயை எதிர்கொள்ள அரசாங்கம் எங்களை நிர்வாணமாக அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எல்லோரும் பயப்படுகின்றார்கள். ஏனெனில் நோயாளிகளை பார்க்கிறோம். அதன் பின் வீட்டிற்கு செல்கிறோம். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பார்ப்பதால் நாமே அந்த நோயை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றனர்.
#apoilcontrelecovid-19: des soignants posent nus pour protester contre le manque de matériel https://t.co/aWMO0zgaWX pic.twitter.com/zxDHXrtaXh
— DH les Sports + (@ladh) April 2, 2020
நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதற்கும், எங்களுக்கும், எங்கள் நோயாளிகளுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், எங்களிடம் இல்லாத பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. உள்ளூர் மருத்துவ ஊழியர்கள் அரசாங்கத்திம் இருந்து பெற்றுள்ள முகமூடிகள் எல்லாம் பழைய முகமூடிகள். 15 முதல் 20 ஆண்டுகளாக நம் நாட்டின் சுகாதாரத்துறை மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 89. 953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7,560 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
des EPI pour nos soignants #masquesFFP2 #masque #Blouse #apoilcontrelecovid #Covid_19 #coronavirus #confinement pic.twitter.com/zWe6vCxpWw
— 🅿🅰🆂🅲🅰🅻 🌐🦎 ➰ (@pmarsande) April 2, 2020