Categories
தேசிய செய்திகள்

செவிலியர்களின் கவனக்குறைவு….” போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்”… அதிரடி சஸ்பெண்ட்..!!

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைக்கு சானிடைசரை ஊற்றிய செவிலியரால் குழந்தைகள்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கடந்த 31ஆம் தேதி வழங்கப்பட்டது. இதில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசரை போட்டுள்ளனர்.

சானிடைசர் வழங்கப்பட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் அந்த குழந்தைகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் தற்போது 12 குழந்தைகளின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு சானிடைசரை மாற்றி ஊற்றிய மூன்று பணியாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் மீது விசாரணை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “15 நாட்கள் முறையான பயிற்சி அளித்து தான் சொட்டு மருந்து வழங்க அனுமதித்தோம். யாரும் பயிற்சியின் போது வழங்கப்பட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்பது தெரியவருகிறது. கைகளை சானிடைசரை கொண்டு சுத்தம் செய்த பிறகு தான் குழந்தைகளை தொட வேண்டும் என அறிவித்து இருந்தோம். ஆனால் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |