புதுக்கோட்டை மாவடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் டாக்டர்கள் விவேக் ராஜ், மணிவண்னன், சிவசங்கரி, கீதா உட்பட அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் உயிர்நீத்த செவிலியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி செவிலியர்களுக்கு சால்வே அணிவித்துப் பாராட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான நினைவுப்பரிசு வழங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சி முடிவில் மோனோபாய் நன்றி கூறியுள்ளார்.