சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனை வளாகத்திலுள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மருத்துமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விருப்பு வெறுப்பின்றி சிகிச்சை அளிப்போம் என செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.