நர்சிங் கல்லூரி ஒப்புதல் வாங்கி தருவதாக முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கூறி, கல்வியாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நர்சிங் கல்லூரி மற்றும் கூடுதலாக கல்லூரிகளை ஆரம்பிப்பதற்காக 30 லட்சம் ரூபாயை முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் கொடுத்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கல்வியாளர் இளமாறன் புகார் மனு அளித்துள்ளார்.