சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் செய்யலாம் வாங்க .
தேவையான பொருள்கள்:
முட்டை – 5
துருவிய சீஸ்- 100 கிராம்
சீரகத்தூள் – 4 ஸ்பூன்
மிளகு தூள் – 4 ஸ்பூன்
எண்ணெய் -தேவையானஅளவு
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
முதலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்து நுரை பொங்க அடித்து கொள்ள வேண்டும்.பின் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , முட்டையை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள், துருவிய சீஸ் தூவி பிரட்டி எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் தயார் !!!