Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!

அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது.

எந்த நிறுவனம் முதலில் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயார் செய்து வழங்குகின்றதோ அந்த மருந்தை சங்கிலித்தொடர் வழிமுறையை பின்பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம்” என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மருத்துவ சோதனையில் நான்கு தடுப்பு மருந்துகள் உள்ளது.

மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவிற்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை ஒரு நிறுவனம் மட்டுமே தயார் செய்துவிட முடியாது. இதனால் பல நிறுவனங்களின் தடுப்பு மருந்தை பரிசீலித்து வருகின்றோம் என்றும் கூறியிருந்தார். உலக அளவில் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 1,09,856 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |