Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN : வங்காளதேசம் அபார ஆட்டம் ….! நியூஸிலாந்து அணி சறுக்கல் ….!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.

நியூஸிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 328 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார் .இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 2-ம் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது .இதனால் 153 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இதில் முகமதுல் ஹசன் 78  ரன்னும் ,கேப்டன் மொமினுல் ஹக் 88 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு களமிறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதில் லிட்டன் தாஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட், நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.இதனால் 73 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேச அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடங்க உள்ளது

Categories

Tech |