Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN 3-வது டி 20 : 52 ரன்கள் வித்தியாசத்தில் …. வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து ….!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் வங்காளதேச அணி  76 ரன்களில் படுதோல்வியடைந்தது.

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 3-வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ஹென்றி நிகோலஸ் 36 ரன்களும் , டாம் பிளெண்டல் 30 ரன்களும் குவித்தனர் இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி 129 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.

ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்காளதேச அணி தடுமாறியது. இறுதியாக 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  76 ரன்களில் வங்காளதேச அணி படுதோல்வியடைந்தது. இதில் நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், மெக்கன்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர் .இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

Categories

Tech |