நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டிவான் கான்வே 122 ரன்கள் எடுத்தார் .
இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது .இதில் நியூசிலாந்து அணி வீரர் ஹென்றி நிக்கோலஸ் 75 ரன்கள் ஆட்டமிழக்க, இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. இதன்பிறகு வங்காளதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாகநஜ்முல் ஹொசைன் 64 ரன்கள் குவித்தார். இறுதியாக 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஹசன் ஜாய் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.