Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN முதல் டெஸ்ட் :டேவன் கான்வே அதிரடி சதம் ….! வலுவான நிலையில் நியூசிலாந்து…!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் 1  ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் பிறகு வில் யங் – டேவன் கான்வே ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.இதில்  வில் யங் 51 ரன்னில் வெளியேற, டேவன் கான்வே 122 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் டேவன் கான்வே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார் . இதன்பிறகு களமிறங்கிய ராஸ் டெய்லர் 31 ரன் , டாம் பிளண்டல் 11 ரன் என அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர் .இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்துள்ளது. வங்காளதேச அணி சார்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார் .

Categories

Tech |