வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் டேவன் கான்வே 122 ரன்கள் குவித்து அசத்தினார் .
வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்துள்ளது .இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் புத்தாண்டில் முதல் சர்வதேச சதத்தை அவர் பதிவு செய்துள்ளார் .அதோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2-வது சதத்தை பதிவு செய்தார் . இதற்கு முன்பு லண்டன் லார்ட்சில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் 200 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் அறிமுக இன்னிங்ஸிலேயே சதம் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.