நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் அரை சதமடித்து அசத்தினார். பின் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜோ டென்லியுடன், ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதமடித்து அசத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. ஜோ டென்லி 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சவுதியுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பென்ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும், ஒல்லி போப் 18 ரன்களுடனும் களத்திலுள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் கிராண்ட்ஹோம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
England go to stumps on day one at 241/4.
Joe Denly scored a steady half-century, and Ben Stokes built on that platform. The all-rounder will resume at 67* tomorrow.#NZvENG LIVE ⬇️ https://t.co/IdOtHFVZap pic.twitter.com/L55dq2FX3L
— ICC (@ICC) November 21, 2019