Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : தடுமாறிய இந்தியா…. காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயஸ் ….. 219 ரன்களுக்கு ஆல் அவுட்..!!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது..

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து ஹேமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவான் 28 ரன்களும், சுப்மன் கில் 13 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.. இதைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் – ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர்.. பின் ரிஷப் பண்ட் 10 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட் ஆக, சிறப்பாக ஆடிவந்த ஷ்ரேயஸ் ஐயர் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து தீபக் ஹூடா 12, தீபக் சாஹர் 12, சாஹல் 8, அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனபோதிலும், மறுபுறம் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் ஆடி 51(64) ரன்கள் எடுத்த நிலையில் 48 ஆவது ஓவரில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 47.3 ஓவரில்  219 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது. நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளும், லாக்கி பெர்குசன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தற்போது நியூசிலாந்து களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது..

Categories

Tech |