கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து ஹேமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 49 ரன்களும் எடுத்தனர்..
இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்த நிலையில், மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் ஆலன் 57 ரன்கள் குவித்து அவுட் ஆனார், கான்வே 38* ரன்களுடனும், வில்லியம்சன் ரன் எடுக்காமலும் இருந்தனர். நியூசிலாந்து அணி 18 ஓவரில் 104/1 என இருந்தது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது.