இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன்நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடர் இன்று தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததன் காரணமாக 12 மணிக்கு தொடங்க வேண்டிய இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு பின் முதல் டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மழையால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். போட்டி நடக்கவில்லை என்றால் என்ன நாம் அரங்கில் கால்பந்து ஆடுவோம் என்பது போல இரு அணி வீரர்களும் மகிழ்ச்சியாக ஆடினர். சில வீரர்கள் அதனை பார்த்து ரசித்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும் கால்பந்து ஆடுவதை போல மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளது.
A bit of fun with @BCCI during the rain delay☔️ Fingers crossed the rain passes soon 🤞 #NZvIND #CricketNation pic.twitter.com/axJqJpJPw6
— BLACKCAPS (@BLACKCAPS) November 18, 2022
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
Football volleyball while we wait for the rain to pass 🤞 ⚽️#NZvIND #CricketNation pic.twitter.com/dTU5Z2NbqH
— BLACKCAPS (@BLACKCAPS) November 18, 2022