Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : முதல் ஒருநாள் போட்டி….. ஷ்ரேயஸ், தவான், கில் அசத்தல்….. இந்தியா 306 ரன்கள் குவிப்பு..!!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி..

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில்  டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.

இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.. இருவரும் அரைசதம் அடித்தனர்..

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் 24 ஆவது ஓவரில் சுப்மன் கில் 50 (65) ரன்னிலும் அதற்கடுத்த ஓவரில் தவான் 72 (77) ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ரிஷப் பண்ட் 15 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இந்த ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. சஞ்சு சாம்சன் 36 ரன்களில் அவுட் ஆனார்.

அதனை தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஷ்ரேயஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 80 (76) ரன்களில் ஆட்டமிழந்தார்.. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 16 பந்துகளின் 37* ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது..நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தற்போது நியூசிலாந்து அணி களமிறங்கி பேட்டிங் ஆடி வருகிறது..

Categories

Tech |