Categories
மாநில செய்திகள்

ஓ அப்படியா!…. எடப்பாடி மவுனத்தில் இப்படி ஒரு கணக்கா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று அதிமுகவுக்குள்ளே பேச்சு எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் இருந்து இறங்கிய போதும் மோசமான முடிவாக அதிமுகவுக்கு அமையவில்லை. 65 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக வந்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி பெற்று பிரதான தோல்விதான் என்று அப்போதே கூறப்பட்டது.

ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஆளுங்கட்சிக்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் தான் எதிர்க்கட்சியை துடிப்புடன் இயங்கச் செய்யும். மக்கள் பார்வையிலும் இருக்க முடியும்‌. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உட்கட்சி பிரச்சினையிலேயே நிம்மதியை பறிகொடுத்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு சார்பாக வந்து நின்றாலும் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்பு தான் ரிலாக்ஸ் மூடுக்கு வர முடியும் என்று நினைக்கிறார்‌. ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மறுபடியும் உள்ளே விட்டால் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை அவரது எண்ணமாக உள்ளது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவி ஏற்ற பிறகு களத்தில் இறங்கினால் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் நமது செயல்பாடு இருக்கும் என்று நினைக்கிறாராம். பாஜகவோ‌, அதன் தலைவர் அண்ணாமலையோ செய்யும் சின்ன சின்ன ஸ்டண்ட் எல்லாம் விரைவில் மறந்து போகும். ஒரு வேளை அது திமுக எதிர்ப்பு மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கினால் அதை தேர்தல் சமயத்தில் நாம் அறுவடை செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறாராம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |