வருகிற டிச..25 ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு மக்கள் எதற்காக “Merry Christmas” என கூறுகிறார்கள்? என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பிறந்தநாள், ஆண்டு விழா, விடுமுறை மற்றும் புத்தாண்டுக்கு “Happy” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
எனினும் கிறிஸ்துமஸுக்கு “Merry” என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய பழமொழியின் காரணம் ஆகும். Happy Christmas உயர் வகுப்பினருடன் தொடர்புடையது ஆகும். அதேபோல் Merry Christmas சமூகத்தின் தாழ்மையான பகுதிகளை சேர்ந்தவர்களின் பிரதிபலிப்பை கொண்டு இருந்தது. இதனால் அரச குடும்பம் Happy Christmas என்பதை ஏற்றுக்கொண்டது.
மறைந்த மன்னர் 2ஆம் எலிசபெத் மகாராணி, தன் வருடாந்திர ஒளிபரப்பில் மக்களுக்கு Happy Christmas என வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். கடந்த 1534ம் வருடம் பிஷப்ஜான் பிஷர் ஹென்றி VIIIன் முதல்வர் தாமஸ் குரோம்வெல்லுக்கு எழுதிய கடிதத்தில், MerryChristmas என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதுபோன்று பிரபலமான ஆங்கில கரோல், நாங்கள் உங்களுக்கு Merry Christmas வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் என 1500களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Merry Christmas எனும் வார்த்தையை பிரபலப்படுத்தியது.