இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. மேலும் விபத்துகள் நடக்க கூடாது என்பதற்காக தண்டவாளத்திற்கு பூஜை செய்துள்ளதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.