மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தான் தயார் நிலையில் உள்ளதாக சமாஜ்வாடி தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தான் தயாராக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்க மமதா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். இதனிடையில் டெல்லி, கோவா, மகாராஷ்டிரா என அவர் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவிடம், மமதாவுடன் நீங்கள் கூட்டணி வைத்து கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அகிலேஷ் யாதவ் கூறியதாவது “நான் மமதாவே வரவேற்கிறேன். அவர் மேற்கு வங்கத்தில் பாஜகவை துடைத்து எறிந்தவர் ஆவார்.
உத்தரப்பிரதேச மக்களும் அதுபோலவே பாஜகவை விரட்டி அடிப்பார்கள். ஆகவே சரியான நேரம் வரும்போது கூட்டணி தொடர்பாக பேசலாம். காங்கிரஸைப் பொறுத்தவரையிலும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். அவர்களுக்கு வருகின்ற சட்டசபைத் தேர்தலில் 0 சீட்தான் கிடைக்கும்” என்று கூறினார். அவரது இந்த பேச்சு காங்கிரஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உ.பி. தேர்தலில் பிரியங்கா வத்ரா தலைமையில் காங்கிரஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது நினைவில் இருக்கும். இதனையடுத்து மறுபக்கம் அகிலேஷை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வறுத்தெடுக்க பிரியங்கா தவறுவதில்லை.
மொராதாபாதாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரியங்கா பேசியபோது “லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொலை செய்யபட்டபோது அகிலேஷ் யாதவ் எங்கு சென்றார். ஆளும் பாஜகவினரால் ஜீப் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது அவரது கண்ணுக்கு தெரியவில்லையா” என்று பிரியங்கா கூறினார். காங்கிரஸுடன் எதற்காக கூட்டணி வராது என்று செய்தியாளர்கள் கேட்டபோது அகிலேஷ் கூறியதாவது “நாங்கள் 2017-ம் ஆண்டு தேர்தலிலேயே கூட்டணி வைத்தபோது அது சரியான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸை முன்பே நிராகரித்து விட்டனர்” என்றார்.