Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் கட்லெட் செய்யலாம் வாங்க ….

ஓட்ஸ் கட்லெட்

தேவையான  பொருட்கள் :

ஓட்ஸ் – 1 கப்

வெங்காயம் –  1

உருளைக்கிழங்கு –  1

பச்சைப் பட்டாணி – 1/2 கப்

கேரட்  –  1/2 கப்

குடமிளகாய் – 1/2 கப்

பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2

தனியாத்துள்  –  1/2 டீஸ்பூன்

சீரகத்தூள்  –   1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

oats cutletக்கான பட முடிவுகள்

செய்முறை:

ஓட்ஸ்  மற்றும்   பிரெட் இரண்டையும் மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்.  கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி, சேர்த்து  வதக்கவும். காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் பிரட்டி, உருண்டைகளாக்கி, தட்டி தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான ஓட்ஸ் கட்லெட் தயார் !!!

Categories

Tech |