கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் மிக பெரிய பேசுபொருளாக இருந்த ஒரு விஷயம் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபரானார். இந்நிலையில் ஜோ பைடன் தலைமையிலான அமைச்சரவையில், ஒபாமா பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,
ஒபாமா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் ஜோ பைடன் ஆட்சியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்க நினைக்கவில்லை. அப்படியான பதவிகள் அளிக்கப்படுவதை தவிர்த்து விடுவேன். அப்படி இல்லையென்றால் என் மனைவி என்னை விட்டு போய் விடுவார். ஆனால் நான் ஜோ பைடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.